சுடச் சுடச் செய்திகள்

தர்மன்: வேலைச் சந்தைக்குள் வெளிநாட்டினர் வருவதற்கு கட்டுப்பாடுகள் அவசியம்

சிங்கப்பூருக்கு இந்திய நிபுணர் கள் பெயர்ந்து செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு, “பொருட்கள், சேவை களுக்கு தடையில்லை. ஆனால் மக்கள் பெயர்ந்து செல்வதற்கு கட்டுப்பாடுகள் இருக்க வேண் டும். இல்லாவிட்டால் வர்த்தகங் கள் திறன்மிகுந்தவையாக இருப் பதற்கான முயற்சி குறைந்து விடும்,” என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் கூறி யுள்ளார். இந்தியாவில் நேற்று முன் தினம் பொருளியல் கருத்துக்களம் ஒன்றில் பங்கெடுத்தபோது திரு தர்மன் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் ஊழியரணியில் ஏற்கெனவே மூன்றில் ஒரு பங்கு வெளிநாட்டினர் என்று குறிப்பிட்ட திரு தர்மன், “நாட்டின் வேலைச் சந்தைக்குள் மக்கள் பிரவேசிப் பதைக் கண்காணிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான கொள்கை வரையறை ஏதுமின்றி எல்லைகளைத் திறந்து வைப்பது புத்திசாலித்தனமானதல்ல,” என் றும் சொன்னார். இந்திய நிதி அமைச்சு ஏற்பாடு செய்த ‘டெல்லி எக்கனாமிக்ஸ் கான்கிளேவ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருந்தார் திரு தர்மன். சிங்கப்பூருக்கு இந்திய நிபு ணர்கள் சென்று பணிபுரிவதில் சிக்கல் இருப்பதன் தொடர்பில் இந்தியா இவ்வாண்டு தொடக்கத் தில் தனது அக்கறையை முன் வைத்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon