பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்ட மாற்றங்களுக்கு வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் ஆதரவு

குற்றவியல் நடைமுறை தொகுப்புச் சட்டத்திலும் சான்றுச் சட்டத்திலும் பரிந்துரைக்கப் பட்டுள்ள மாற் றங்கள், மேம்படுத் தப் படவேண்டிய அம்சங்களை எடுத்துக்காட்டும் அதே சமயத் தில், சமூகத் தீர்ப்பு முறை, பாதிப்புக்கு இலக்காகக் கூடியவர் களின் பாதுகாப்பு போன்றவற்றில் முற்போக்கான நடவடிக்கையாக அமையும் என்று வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், ஆதரவுக் குழுக்கள் போன்றோர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறியுள்ளன. சமூகத் தீர்ப்புமுறையின் பரந்த அணுகுமுறையைப் பலரும் பாராட்டினர். பரிந்துரைக்கப்பட் டுள்ள திருத்தங்களின்கீழ், அதிக மான குற்றவாளிகளும் குற்றச் செயல்களும் சமூகத் தீர்ப்புமுறைக்குத் தகுதி பெறும். அனைத்து வழக்குகளுக்கும் சிறைத் தண்டனை விதிக்க வேண்டியதில்லை என்பது. இளம் குற்றவாளிகள் விஷயத்தில் சில சமயங்களில் கடுமையான தண் டனை நன்மை அளிப்பதற்குப் பதிலாக தீங்கு விளைவிக்கலாம் என்பது வழக்கறிஞர் சுயீ யி சியோங்கின் கருத்து.

மேலும் சிறைத் தண்டனைகள் விதிப்பதில் நீதிபதிகளுக்குக் கூடுதல் நீக்குபோக்கு அளிப்பது, குற்றவாளிகளுக்கு ஏற்றவாறு தண்டனைகளை வழங்க நீதிபதி களுக்கு உதவும். அதேநேரத்தில் குற்றவாளி களும் தங்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கும் என்று எதிர்பார்ப்ப தாக எவர்ஷெட் ஹேரி இலாயஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறி ஞரான திரு சுயீ யி கூறினார். பாலியல் குற்றங்களுக்கு இலக்காவோருக்கு அந்தரங்கத் தன்மை மிகவும் முக்கியமான ஒன்று என மாதர் செயலாய்வுச் சங்கத்தின் (அவேர்) நிர்வாக இயக்குநர் கொரினா லிம் கூறினார். “தங்களது பெயரும் கதையும் ஊடகங்களில் வெளிவருமா என்பதே குற்றச்செயலைப் புகார் செய்வதா இல்லையா என யோசிப் பவர்கள் அதிகமாகக் கேட்கும் கேள்வி,” என்று அவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon