சுடச் சுடச் செய்திகள்

சமூகத் தண்டனைத் திட்டத்தில் மாற்றங்கள்

கடந்த 2010ஆம் ஆண்டு குறிப் பிட்ட குற்றவாளிகளைச் சீர் திருத் தும் நோக்கத்துடன் அறி முகப் படுத்தப்பட்ட சமூகத் தண்டனை திட்டத்தில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. கட்டாய சிகிச்சை ஆணை, சமூக சேவை தொடர்பான உத்தர வுகள், கைதிகள் நேரில் முன்னி லையாகி தங்கள் வருகையை பதிவு செய்வது, குறுகிய காலத் தடுப்புக் காவல், சமூக அடிப்படையி லான தண்டனைகள் போன்றவை இதில் அடங்கும். உதாரணமாக, திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், ஏற்கனவே மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அல்லது ஒருமுறை சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டவர்கள் சமூகத் தீர்ப்புமுறைக்குத் தகுதி பெறுவார்கள். அதோடு, ஏற்கெனவே போதைப் பொருள் அல்லது பசைப்பொருள் புழக்கத்திற்காக மறுவாழ்வு நிலை யத்திற்கு அனுப்பப்பட்ட குற்றவா ளிகள் மீதான தற்போதைய குற்றச்சாட்டு மாறுபட்டிருந்தால், அவர்களுக்கு சமூகத் தீர்ப்பு அளிக்கப்படலாம். ஆனால், ஒருமுறைக்கு மேலாக மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட குற்றவாளிகள் இதற்குத் தகுதி பெறமாட்டார்கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon