50 முக்கிய சட்ட மாற்றங்கள் பரிந்துரைப்பு

குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும், சான்று சட்டத்திலும் சட்ட அமைச்சகம் பரிந்-துரைத்துள்ள 50 பரந்த அளவிலான மாற்றங்களின் படி, இனி எழுத்து மூலமாக பெறப்படும் வாக்குமூலங்களுக்கு பதிலாக, விசாரணை அதிகாரிகள் சாட்சியத்தை காணொளி (வீடியோ) மூலம் பதிவு செய்யலாம். அத்துடன், பாலியல் குற்றங்கள், சிறார் தொடர்பான குற்றங்களில் விசாரணைக் கட்டத்திலேயே வழக்கு குறித்து விவாதிப்பதற்கு தடை விதிக்க இந்த மாற்றங்கள் வழிவகுக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, இந்த மாற்றங்கள் விசாரணை அதிகாரிகளுக்கு இருக்கும் அதிகாரம், நீதிமன்ற நடைமுறைகள் ஆகியவற்றுடன் நீதிமன்றங்களுக்கு உள்ள தண்டனை விதிக்கும் அதிகாரம், அவற்றின் மற்ற அதிகாரங்கள் போன்றவற்றை கொண்டிருக்கும்.

இது குறித்து கடந்த வெள்ளிக் கிழமையன்று ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்த சட்ட அமைச்சு, தற்பொழுது பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் குற்றவியல் நீதித் துறையில் நியாயம், சட்டத்திற்கு முன் அனைவரையும் சமமாக நடத் துவது போன்றவற்றை மேம் படுத்தும் என்று விளக்கியது. தற்போதைய குற்றவியல் நடை முறைச் சட்டம் கடந்த 2010ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக திருத்தி அமைக்கப்பட்டது. சிங்கப்பூரில் நடைமுறையில் இருந்த ஒரு சட்டம் ரத்து செய் யப் பட்டு அதற்கு மாற்றாக மற் றொரு சட்டம் இயற்றப்பட்டது அப்பொழுது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சான்று சட்டத்தில் கடைசியாக முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது 2012ஆம் ஆண்டில்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆள் நடமாட்டமற்ற டர்ஃப் கிளப் அவென்யூவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 May 2019

அச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்

சாக்கியமுனி புத்த கயா ஆலயத்தில் புத்த சிலையின்மீது தங்கத் தகடுகள் வைத்து பலரும் வழிபட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 May 2019

நிம்மதி நல்கும் விசாக தினம்