சுடச் சுடச் செய்திகள்

என்டியு முன்னாள் மாணவர்களுக்கு திறன் வளர்ச்சி ஊக்குவிப்பு

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் (என்டியு) முன்னாள் மாணவர்கள் 222,000 பேர் தங்கள் திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள அவர்கள் ஒவ்வொரு வருக்கும் தலா $1,600 இணைநிதி வழங்கப்படவுள்ளது. அவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு அந்தப் பல்கலைக்கழகத் தில் வர்த்தகம், நிதி முதல் வரை கலை வடிவமைப்பு என்று பல்வேறு துறைகளில் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ளலாம். அடுத்த மாதத்திலிருந்து கிடைக்கவுள்ள இந்த இணைநிதி யைக் கொண்டு 120க்கு மேற்பட்ட திறன் சார்ந்த பயிற்சிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்தப் புதிய திட்டத்தை நேற்று நடைபெற்ற வருடாந்திர நன்யாங் முன்னாள் மாணவர் சங்க விருது நிகழ்ச்சியில் அறிவித்த என்டியு- வின் தலைவர் பேராசிரியர் பெர்டில் ஆண்டர்சன், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் இந்தப் பயிற்சிகளுக்கு 5,000 முன்னாள் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என்றார். அதில் முன்னாள் மாணவர்கள் ஆண்டுக்கு கூடியபட்சம் இரண்டு பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஒரு நாள் முதல் ஒரு வாரம் வரை நீடிக்கும் 63 குறுகியகாலப் பயிற்சிகளிலும் 13 முதல் 15 வாரங்கள் நீடிக்கும் நீண்டகால பயிற்சிகளிலும் மாணவர்கள் பங் கேற்கலாம். இதைத் தவிர, ஆர்வமுள்ளோர் எட்டு பருவங்கள் நீடிக்கும் பட்டக் கல்விக்குப் பிந்தியப் படிப்பிலும் பங்கேற்கலாம். சில பயிற்சிகள் மாணவர்கள் வகுப்புக்கு வருமுன் இணையத்திலேயே தொடங்கி, பின்னர் வகுப்பறையில் தொடர்வ தாகவும் இருக்கும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon