குமாரி இந்திராணி: ஊழலை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது

ஊழல் விவகாரத்தில் சிக்கிய கெப்பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின் நிறுவனம், அமெரிக்க, பிரேசில் மற்றும் சிங்கப்பூர் அதி காரிகளுடன் சமரசம் செய்து கொண்டது. சிங்கப்பூர் சட்டத் தின்படி மட்டும் அந்த விவகாரம் கையாளப்பட்டிருந்தால் இவ்வளவு பெரிய தீர்வை எட்டியிருக்க முடியாது என்று சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். சிங்கப்பூரர்களோ அல்லது சிங்கப்பூர் நிறுவனங்களோ வெளி நாடுகளில் ஊழலில் ஈடுபடுவதை அரசாங்கம் ஒருபோதும் பொறுத் தருளாது என்ற அமைச்சர், சிங்கப்பூரர்கள் அந்த நாடுகளின் சட்டங்களுக்கு இணங்கி நடப் பார்கள் என்று எதிர்பார்ப்பதாக வும் கூறினார். சிக்கலான வர்த்தகச் சூழ் நிலைகளிலும்கூட தங்களது தரத்தினை அவர்கள் தாழ்த்திக் கொள்ளக்கூடாது என்றும் மிக முக்கியமாக, அத்தகைய நடை முறைகளை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்துவிடக்கூடாது என்றும் குமாரி இந்திராணி அறிவுறுத்தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!