மறுவிற்பனை வீட்டுக்கான இணையத் தளத்தை வீவக சீரமைத்ததை அடுத்து சாதனை

சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மறுவிற்பனை வீடுகளுக்கான தன்னுடைய இணைய வாசலை (portal) இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி சீரமைத்ததன் விளை வாக வீடுகளின் மறுவிற்பனைகள் வேகமாக நடந்து முடிகின்றன.

அந்தப் புதிய மறுவிற்பனை இணைய வாசல் வழி வீட்டை விற்பதும் வாங்குவதும் எட்டே வாரங்களில் முடிந்துவிடுகின்றன. பொதுவாக வீடு பரிவர்த்தனைக்கு மறுவிற் பனைச் சந்தையில் 16 வாரங்கள் ஆகும். மறுவிற்பனை வீடுகளை வாங்குவது, விற்பதன் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கழகத்திற்கு இரண்டு தடவை போய்வர வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் புதிய ஏற்பாட்டின் மூலம் இது ஒரு தடவையாகக் குறைந்தது. அதோடு மட்டுமின்றி, இணைய வாசல் வழியாகவே இப்போது தேவையான அனைத்துப் படிவத் தாக்கல்களும் சரிபார்ப்புகளும் நடக்கின்றன. மறுவிற்பனை வீடுகளை வாங்குவோரும் விற்போரும் ஒரே ஒரு தடவை கழகத்திற்குச் சென்று, தேவைப்படும் பத்திரங்களில் கையெ ழுத்திட்டால் இப்போது போதுமானது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!