பைனியர் ரோடு சாலை சந்திப்பில் வாகன விபத்து; ஒருவர் காயம்

ஜூரோங் வெஸ்டிலுள்ள சாலைச் சந்திப்பில், கனரக வாகனம் ஒன்று காரை மோதியதில் ஒருவர் காயமடைந்தார். நேற்று காலை 9.15 மணிக்கு, உதவிக்கான அழைப்பு கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர். பைனியர் ரோட்டுக்கும் ஜாலான் புரோவுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் விபத்து நடந்தது. அதில் காயமடைந்த ஆடவர், இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டுசெல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர். சாலைச் சந்திப்பிலுள்ள போக்குவரத்து விளக்குக் கம்பம் சிவப்பு விளக்கைக் காட்டியபோதும் கனரக வாகனம் நிறுத்தாமல் சென்றுகொண்டிருந்ததாகக் காட்டும் காணொளியை ‘ரோட்ஸ்.எஸ்ஜி’ தளம் பதிவேற்றம் செய்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!