புதிய தலைவர், புதிய அத்தியாயம்

ப. பாலசுப்பிரமணியம்

அண்மைய ஆண்டுகளாக சரிவு கண்டுவரும் சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழில் சபையின் உறுப்பினர்களின் எண்ணிக் கையை அதிகரிப்பதில் தீவிரம் காட்டுவதே தமது முதல்கட்டப் பணியாகும் என்று அச்சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டாக்டர் டி.சந்துரு தெரி வித்தார். சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழில் சபையின் 77வது ஆண்டு பொதுக்கூட்டம் இண்டர்கான்டி னென்டல் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் புதிய சபைத் தலைவர் டாக்டர் சந்துருவும் அவரின் தலைமையில் கீழ் செயல்படும் 16 இயக்குநர் சபை உறுப்பினர்களும் அதிகாரபூர்வமாக பதவி ஏற்றனர். நிகழ்ச்சியில் செய்தியாளர் களிடம் பேசிய டாக்டர் சந்துரு, இப்போது 8,000 இந்திய நிறுவனங் கள் சிங்கப்பூரில் செயல்படுவதாக வும் சபையில் உறுப்பினர்களாக சேர்வதற்கான கட்டணத்தைக் குறைத்து இந்த நிறுவனங்களைச் சென்றடைய முயற்சிகள் எடுக் கப்படும் என்றும் தெரிவித்தார்.

சிறிய, நடுத்தர நிறுவனங் களுக்கு உதவுவதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்த டாக்டர் சந்துரு, அவர்கள் இந்தியா போன்ற நாடு களில் தொழில் செய்வதற்கான அணுகுமுறையை ஆலோசிக்க சபையில் திறன்மிக்க, அனுபவ மிக்க உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இளைய தொழில்முனைவர் களைச் சபைக்கு ஈர்ப்பதிலும் சபை யில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அவர்களுக்குத் தகுந்த தொழில் முனைவர், தலைமைத்துவத் திட் டங்களைத் தொடர்ச்சியாக வழிந டத்தவும் சபை திட்டமிட்டுள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகத் தொழில் சபையின் தலைவர் திரு ஆர்.தேவேந்திரன், சபை இப்போது ஆரோக்கியமான பொருளியல் நிலையில் உள்ளது என்றும் புதிய சபை உறுப்பினர்கள் மென்மேலும் சபையை மேம்படுத் துவர் என்ற நம்பிக்கை கொண்டு உள்ளதாகவும் கூறினார்.

மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா, சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழில் சபையின் புதிய தலைவர் டாக்டர் டி.சந்துரு ஆகியோருடன் இயக்குநர் சபையின் புதிய உறுப்பினர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!