புக்கிட் பாத்தோக் ஈரச்சந்தையில் மலைப்பாம்பு

புக்கிட் பாத்தோக்கில் உள்ள ஈரச்சந்தை ஒன்றில் நேற்றுக் காலை காணப்பட்ட மலைப்பாம்பு அங்கு பரபரப்பை ஏற்ப டுத்தியது. சந்தையில் பலர் திரண்டு புகைப் படங்களையும் காணொளிகளையும் எடுத்தனர். “ஈரச்சந்தையில் தென்பட்ட மலைப்பாம்பு, ஓர் எலியை விழுங்கிக்கொண்டிருந்ததை மக்கள் பார்த்ததாக நம்பப்படு கிறது. அந்தப் பாம்பு, ஏதோ ஒரு கூரைத் துவாரத்திற்குள் சென்று பதுங்கியிருக்கலாம். அதுபற்றி எண்ணி கவலைப் பட தேவையில்லை,” என்று ‘ஏக்கர்ஸ்’ அமைப்பின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி கலைவாணன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

PHOTOS: FACEBOOK/SUNNYRAJAH

Loading...
Load next