‘தொழிலாளர் தோழர் நட்சத்திர’ விருது

ப. பாலசுப்பிரமணியம்

சக நண்பர்கள் கடந்த 1980ல் பரிந்துரைத்ததால் பொதுத்துறை ஊழியர்கள் (தொழில்நுட்பர் பிரிவு) ஒருங்கிணைந்த தொழிற்சங்கத் தில் திரு நடராஜா துரைராஜசிங்கம் ஓர் உறுப்பினராக எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி சேர்ந்தார். இன்று எத்தனையோ தொழி லாளர்களுக்கு இதுவரையில் பயனளிக்கும் விதத்தில் வேலை யிட மாற்றங்களைக் கொண்டு வந்ததற்கு மூலகாரணமாக விளங்குகிறார் 60 வயது திரு சிங்கம். இந்த ஆண்டின் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் மே தின விருது நிகழ்ச்சியில் தொழி லாளர் தோழர் நட்சத்திர விருது திரு சிங்கத்துக்கு வழங்கி சிறப் பிக்கப்படுகிறது. நீண்டகாலம் தொழிலாளர் இயக்கத்திற்கு முக்கிய பங்களிக் கும் தொழிற்சங்கத் தலைவர் களுக்கு இந்தக் கெளரவ விருது வழங்கப்படுகிறது.

தொழிற்சங்கத்தில் முதலில் உறுப்பினராகச் சேர்ந்தபோது, தொழிற்சங்கம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது எனத் தொடங்கி தொழிலாளர் களின் பிரச்சினைகளுக்குச் செவி மடுத்து தீர்வு காணும் பொறுப்பும் நாளடைவில் தனக்கு வந்ததாக திரு சிங்கம் சொன்னார். தொழிலாளர்களின் குரலாக தொழிற்சங்க உறுப்பினர்கள் செயல்படுவர் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளதாகக் கூறிய திரு சிங்கம், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் போது ஒருவித மனத் திருப்தி கிடைக்கிறது என்கிறார்.

உதாரணத்திற்கு, கட்டுமானத் தளத்தில் வேலை செய்ய வேண்டிய தொழிலாளர்கள் சிலருக்கு $100 வரை இருந்த ஒரு தொகை அளவை $150க்கு உயர்த்த வேண்டும் என்று திரு சிங்கம் பரிந்துரைத்தது நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 62 வயதிற்கும் மேற்பட்ட மூத்த தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து அமைப்புகள் வேலை வழங்குவது, அதோடு அவர்களை வேலையில் அமர்த்தினாலும் சம்பளத்தைக் குறைக்காமல் அவர்கள் வாங்கிய கடைசிச் சம்பளத்திற்கு ஈடான சம்பளத் தொகையைக் கொடுப்பது போன்ற இதர விஷயங்களுக்கும் திரு சிங்கம் குரல் கொடுத்துள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டி லிருந்து திரு சிங்கம் ஆணை பெற்ற கழக ஊழியர்கள் ஒருங் கிணைந்த தொழிற்சங்கத்தின் (AUSBE) பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். தேசிய நூலக வாரியம், நிலப் போக்குவரத்து ஆணையம், சுகா தார மேம்பாட்டு வாரியம் என 12 அரசாங்க அமைப்புகளின் ஊழியர் களின் அக்கறைகளைச் செவி மடுத்து அவற்றுக்குத் தீர்வு காண இச்சங்கம் முனைகிறது.

இவ்வாண்டின் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் மே தின விருது நிகழ்ச்சியில் தொழிலாளர் தோழர் நட்சத்திர விருதை திரு சிங்கம் பெறுகிறார். படம்: தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!