சிங்கப்பூரின் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தேவையற்ற கைத்தொலைபேசி, மின்னேற்றி போன்ற மின்கழிவுகளை பாது காப்பாக அகற்றிவிடலாம். இதற்காக 'பெஸ்ட் டெங்கி', 'கோர்ட்ஸ்', 'கெயின் சிட்டி', 'ஹார்வே நார்மேன்' ஆகிய நான்கு சில்லறைக் கடைகளில் இருபது மின்கழிவு சேகரிப்பு பெட்டிகள் வைக்கப்படவுள்ளன. தேசிய மறுசுழற்சி மின்கழிவு திட்டத்தில் இந்த நான்கு நிறு வனங்களும் சேர்ந்துள்ளதால் இந்த நடவடிக்கை இடம்பெறு கிறது.
சிங்கப்பூரில் உள்ள நான்கு முக்கிய கடைகளில் மின்கழிவுகளை சேகரிக்க மறுபயனீட்டுப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்