ஒரே வீட்டில் வசிக்கும் இந்திய மாது ஒருவரின் குடிநீரில் தூக்க மாத்திரையைக் கலந்து அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ய எண்ணினார் தனியார் வாடகை பேருந்து ஓட்டுநர் ஒருவர். ஆனால் அந்த 21 வயது மாது, அந்தப் பாழ்பட்ட தண்ணீரைக் குடித்தபோது அது கசப்பாக இருந் ததால் அதைத் துப்பிவிட்டார். இந்திய நாட்டவரான 28 வயது அண்ணாதுரை பிரபாகரனுக்கு (படம்) நேற்று ஈராண்டு, 10 மாத சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
குடிநீரில் போதை மாத்திரையைக் கலந்ததாக ஒரு குற்றச்சாட் டையும் சட்டம் தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததாக மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார். சிங்கப்பூரில் ஏழு ஆண்டுக ளுக்கு மேலாக பணிபுரிந்து வந்த அண்ணாதுரை, இந்திய நாட்டவரு மான அந்த மாதுவுடனும் அவரது மாமாவின் குடும்பத்துடனும் தெம்பனிஸ் வீட்டில் வசித்து வந்தார். அந்த மாதுவின் மீது அண்ணாதுரை ஆசைப்பட்டதாகவும் ஆனால் ஒருவர் மற்றொருவருடன் பேசாத காரணத்தினால் அந்த மாது தம்முடன் பாலியல் உறவில் ஈடுபட ஒப்புக்கொள்ள மாட்டார் என அண்ணாதுரை எண்ணியதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் ரேஷல் டான் நீதிமன்றத்தில் கூறினார்.