அடுத்த வாரம் சிங்கப்பூரின் முக்கிய பகுதிகளில், குறிப்பாக தங்ளின், செந்தோசா பகுதிகளில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருக்கும். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இடையிலான உச்சநிலைச் சந்திப்பு இம்மாதம் 12ஆம் தேதி செந்தோசாவில் உள்ள 'கப்பேல்லா' ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, செந்தோசாவும் தங்ளினும் 'சிறப்பு நிகழ்வு வட்டாரங்களாக' அறிவிக்கப்பட்டுள்ளன. ஷங்ரிலா ஹோட்டலில் டிரம்ப்பும் 'தி செயின்ட் ரெஜிஸ் சிங்கப்பூர்' ஹோட்டலில் கிம்மும் தங்கக்கூடும் என அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ள னர். அவ்விரு ஹோட்டல்களுமே தங்ளின் பகுதியில் அமைந்துள் ளன.
டிரம்ப்-கிம் சந்திப்பு நடைபெறவுள்ள கப்பேல்லா ஹோட்டல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்