சட்ட ஒழுங்கில் சிங்கப்பூர் முதலிடம் உலகச் சட்ட ஒழுங்கு குறியீட்டில்

சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித் துள்ளது. சிங்கப்பூரரர்கள் தங்கள் சொந்த நாட்டில் மிகுந்த பாதுகாப் புணர்வுடன் இருப்பதாக கேலப் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாதுகாப்புணர்வை சிங்கப் பூரர்கள் தங்கள் நாட்டில் அனுப விக்கும் அளவுக்கு பிற நாட்டவர்கள் அவர்களது சொந்த நாடுகளில் அவ்வளவாக அனுப விப்பதில்லை என்று ஆய்வு தெரி வித்துள்ளது.

சிங்கப்பூரில் இரவு நேரங் களின்போது சாலைகளில் தனி யாக நடந்து செல்வது பாது காப்பானது என்றும் அதில் ஆபத்து ஏதும் இல்லை என்றும் ஆய்வில் பங்கெடுத்த சிங்கப்பூரர் களில் 94 விழுக்காட்டினர் கூறி உள்ளனர். தங்கள் சொந்த நாடுகளில் இரவு நேரங்களின் போது சாலையில் தனியாக நடந்து செல்வது பாதுகாப்பானது என்று உலகளாவிய நிலையில் சராசரியாக 68 விழுக்காட்டினர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.

உலகச் சட்ட ஒழுங்கு குறியீட்டில் முதலிடம் வகிக்கும் சிங்கப்பூரை அடுத்து இரண் டாவது இடத்தில் நார்வே இருக் கிறது. மூன்றாவது இடத்தில் ஐஸ் லாந்தும் நான்காவது இடத்தில் ஃபின்லாந்தும் உள்ளன. ஐந்தாவது இடத்தை ஹாங் காங்கும் உஸ்பெக்கிஸ்தானும் பிடித்துள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!