சிங்கப்பூரில் நடக்கும் அமெ ரிக்கா-வடகொரியா உச்சநிலைச் சந்திப்பின்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் சிங்கப்பூரில் இருப்பார். ஆனால் அவருக்குப் பின்னிருக்கைதான் இருக்கும் என்று தெரிகிறது. அதற்குப் பதிலாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ முக்கிய இடத்தை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
அண்மைய நாட்களில் அடக்கி வாசித்து வந்திருக்கும் போல் டனின் கடும் சித்தப்போக்கு கார ணமாக முன்பு வடகொரியா கோபம் அடைந்துவிட்டது என்றும் அதன் காரணமாக அமெரிக்கா- வடகொரியா உச்சநிலைச் சந்திப்பு ஏறக்குறைய நடைபெறாமல் போகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறின. அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடன் சிங்கப்பூரில் உச்ச நிலைச் சந்திப்பு நடத்துகிறார்.
ஜான் போல்டன் உச்சநிலை சந்திப்பில் கலந்துகொள்வார். ஆனால் அடக்கி வாசிப்பார் என்று தெரிகிறது. படம்: ஏஎஃப்பி