அமெரிக்க அதிபரைச் சிங்கப்பூரில் அடுத்த வாரம் வடகொரிய தலை வர் சந்திக்கிறார். இருவரும் உச்ச நிலை சந்திப்பு நடத்துகிறார்கள். இந்தச் சந்திப்பிற்காக வட கொரியத் தலைவர் சிங்கப்பூருக்கு வரும்போது அவருடன் ஆக உயரிய மெய்க்காவலர்களும் வரு வார்கள் என்று தெரிகிறது.
அந்த மெய்க்காவலர்கள் இரும் புக் கோட்டையைப் போன்றவர்கள். இதனிடையே, சிங்கப்பூரில் திரு கிம்மின் பாதுகாப்பில் மிக அணுக்கமாகக் கவனம் செலுத்தப் படும் என்று எஸ் ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுப் பள்ளியின் இணை ஆய்வுப் பேராளரான ஷான் ஹோ கருத்து தெரிவித்தார். திரு கிம் இதற்கு முன் சிங்கப் பூர் வந்ததில்லை. ஆகையால் அவ ருடைய பாதுகாப்பைப் பொறுத்த வரையில் சிங்கப்பூர் சூழல் புதிய ஒன்றாக இருக்கும்.
வடகொரிய தலைவரை (நடுவில்) சூழ்ந்துவரும் வடகொரிய மெய்க் காவலர்கள். இவர்களிடம் துப்பாக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி