உட்லண்ட்ஸ் அவென்யூ 6இல் உள்ள புதிய வாடகை வீடுகளில் வசிப்போருக்கு நேற்று வீட்டுக்குத் தேவையான அறைகலன்கள் இலவசமாகக் கிடைத்தன. அட்மிரல்டி குடிமக்கள் ஆலோ சனைக் குழுவின் 'அறைகலன்கள் நன்கொடையும் விநியோகமும் திட்டத்தின்' மூலம் கிட்டத்தட்ட 100 அறைகலன்களை தொண்டூழி யர்கள் திரட்டினர். அந்தப் பொருட்களில் தங்க ளுக்குத் தேவையானவற்றை குடி யிருப்பாளர்கள் தேர்வு செய்தனர்.
அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்த்தளத்தில் இருக்கும் வசிப் போர் குழுவின் அலுவலகத்தில் 50 குடியிருப்பாளர்களுக்கும் மேல் நேற்றுக் காலையில் கூடினர். மெத்தைகள், கட்டில்கள், அலமாரிகள், சமையல் சாதனங் கள், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், அடுப்புகள் முதலிய அறைகலன்களைத் தேர்ந் தெடுக்க அவர்கள் காத்திருந்தனர்.
செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு விக்ரம் நாயர் திரு ஃபெட்லிஷா இப்ராகிமின் வீட்டுக்குள் சோபாவைத் தூக்கி வர உதவுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்