இர்ஷாத் முஹம்மது
மாணவர்களை எதிர்கால பொரு ளியல் சூழலுக்குத் தயார்ப்படுத்த முனைந்துள்ளது கூகல் நிறுவனம். அதற்குத் தேவையான தொழில் நுட்பத் திறனை வளர்ப்பதற்கு இலவச நிரலிடுதல் வகுப்புகளை அந்நிறுவனம் நடத்தி வருகிறது. எட்டு வயது முதல் 15 வயது வரையிலான மாணவர்களுக்கு வயது அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப் பட்டு வருகின்றன.
உதவி தேவைப்படும் மாணவர் களுக்காக சிண்டா போன்ற சுய உதவி குழுக்களோடு இணைந்து கூகல் இந்த வகுப்பு களை நடத்துகிறது. மூன்று ஆண்டு களில் 3,000 மாணவர்களை இந்த வகுப்புகளின் மூலம் பலனடைய வைப்பது கூகலின் நோக்கம்.
இரண்டாவது முறையாக நடத் தப்பட்ட "கோட் இன் தி கம்யூ னிட்டி" எனும் சமூகத்தில் நிரலி டுதல் வகுப்பின் இறுதி நாளான நேற்று மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதைக் கொண்டு திட்டப்பணி ஒன்றை செய்தனர். கணினி விளையாட்டுகளைத் தயாரிப்பது, கணக்குத் தீர்வு காண்பது போன்ற அம்சங்களில் மாணவர்கள் திட்டப்பணியை மேற்கொண்டனர்.
தாயார் அம்பிகாவிடமிருந்து ஒன்பது வயது கவின் நெப்போலியன் நிரலிடுதலை (coding) கற்றுக்கொள்கி றார். பத்து வாரங்கள் நடத்தப்பட்ட 'கூகல்' நிறுவனத்தின் நிரலிடுதல் வகுப்புகளுக்கு அவர் சென்று தமது திறனை வளர்த்துக்கொண்டார். நிரலிடுதல் மீதான ஆர்வமும் அவருக்கு மேலோங்கியுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்