சிங்கப்பூர் உறவுப் பாலம் கொண்டுள்ள பல நாடுகளில் இந்தியாவுடனான உறவுகளே மிக வலுவானது. அதற்குக் காரணம் இந்த இரு நாடுகளுக்கு இடையே எந்த முக்கிய பிரச்சினையும் இல்லாததுதான். உலக நாடுகளை வலம் வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில வளர்ச்சியை வேகமாக முன்னெடுத்துச் சென்றது பல ஆண்டுகளுக்கு முன்னரே சிங்கப்பூரை கவர்ந்தது. இதன் முக்கியத்துவம் நாளடைவில் புலப்படத் தொடங்கியது.
குஜராத்தில் 12 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றியபின் இந்திய தேசிய அரசியலில் திரு மோடி காலடி எடுத்து வைக்கும்போது குஜராத், சீனாவின் வளர்ச்சியடைந்த மாநிலத்துடன் ஒப்பிடும் வகையில், 'இந்தியாவின் குவான்டோங்' என வர்ணிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் கிழக்கு நோக்கி என்ற கொள்கையை கிழக்கத்திய நாடுகளுட னான உறவுகளை வளர்க்கும் கொள்கையாக மாறியது இந்த வட்டாரத்தில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் அதற்கான தருணம் வந்துவிட்ட தையும் சுட்டியது.
இதனால்தான் சென்ற வாரம் இங்கு நடைபெற்ற ஷங்ரிலா கருத்தரங்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய முக்கிய உரையில் சிக்கலான பிரச்சினைகளை சரிசெய்வது குறித்து எதுவுமில்லை. மாறாக, பல்முகத்தன்மை கொண்ட வலுவான இரு நாட்டு உறவுகளை எவ்வாறு ஆழப் பதிப்பது என்பது பற்றியே இருந்தது. பொருளியலைப் பொறுத்தவரை இரு நாடுகளுக்கும் இடையே உள்ள 13 ஆண்டுகால முழுமையான பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட ஆய்வு நிறைவு பெற்றுள்ளது