தமிழவேல்
உலகத்தின் பார்வை தற்போது சிங்கப்பூர் மீதுதான் உள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோர் இடையே நாளை நடைபெறவுள்ள உச்சநிலை மாநாடு உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிங்கப்பூரின் எஃப்1 விரைவு கார் பந்தயக் கட் டடத்துக்கு அருகில் செய்தியாளர் கள் குழுமியுள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கிட்டத்தட்ட 2,500 செய்தியாளர்கள் சிங்கப்பூ ருக்கு நாளை வந்து சேர்ந்து விடுவார்கள்.
அவர்களில் பெரும் பாலானவர்கள் இங்கு வந்து விட்டனர். இதற்கு முன்பு ஒரு சில அனைத்துலக மாநாடுகள் இங்கு நடைபெற்றிருந்தாலும் ஒரே நேரத் தில் இத்தனை ஆயிரம் செய்தி யாளர்கள் இங்கு குவிந்துள்ளது இதுவே முதன்முறை. அச்சு, வானொலி, தொலைக் காட்சி, இணையம் ஆகிய பலதரப் பட்ட ஊடகங்களின் பன்னாட்டு செய்தியாளார்கள் சில நாட்களுக்கு அனைத்துலக செய்தியாளர் நிலையத்தைத் தான் 'இல்லமாகக்' கொண்டிருப்பார்கள்.