வரலாற்றுச் சிறப்புமிக்க டிரம்ப்- கிம் உச்சநிலை மாநாடு "ஆக்க கரமான பாதையை உருவாக்கி அணுவாயுத ஒழிப்புக்கு இட்டுச் செல்லக்கூடும்," என நம்பிக்கை தெரிவித்த பிரதமர் லீ சியன் லூங், கொரிய தீபகற்பப் பிரச்சினையைத் தீர்ப்பது நெடிய செயல்பாடு என்றார். இந்த மாநாட்டை சிங்கப்பூரில் நடத்துவதற்கு சுமார் $20 மில்லியன் செலவாகும் என்று கூறியுள்ள பிரதமர் லீ சியன் லூங், அதனை ஓர் அனைத்துலக முயற்சி என்றும் சிங்கப்பூரின் நலனுக்கு உகந்த முயற்சி என்றும் கூறினார். "இது நாம் விருப்பத்துடன் மேற்கொள்ளும் செலவு," என்று நேற்று குறிப்பிட்ட அவர், மொத்தத் தொகையில் பாதிவரை பாது காப்புச் செலவுகள் என்றார். அமெரிக்கா அதிபர், வடகொரி யத் தலைவர் ஆகியோருக்கிடையே நாளை நடைபெற இருக்கும் மாநாடு கொரிய தீபகற்பத்திற்கு புதிய பாதையில் முன்னேற்றங் களை உருவாக்கும் திறன் கொண்டவையாக இருக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
டிரம்ப்-கிம் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு எஃப்1 விரைவு கார் பந்தயக் கட்டடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்துலக செய்தியாளர் நிலையத்தைப் பார்வையிட்ட (இடமிருந்து) வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், பிரதமர் லீ சியன் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்