சிங்கப்பூர் வந்தடைந்த வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், கல்வி அமைச்சர் ஓங் யி காங் ஆகியோர் நேற்று பிற்பகல் சாங்கி விமான நிலையத்தில் வரவேற்றனர். திரு கிம் ஜோங் உன் பயணம் செய்த 'ஏர் சைனா' விமானம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சாங்கி விமான நிலையத் தில் தரையிறங்கியது.
திரு கிம்மை டாக்டர் பாலகிருஷ்ணன் கைகுலுக்கி வரவேற்றதைக் காட்டும் புகைப்படம் (படம்: ராய்ட்டர்ஸ்) இரு அமைச்சர்களின் ஃபேஸ்புக் பக்கங்களிலும் பதிவேற்றப்பட்டிருந்தன. நாளை நடைபெற இருக்கும் உச்சநிலை மாநாட்டை ஒட்டி டாக்டர் பாலகிருஷ்ணன் வாஷிங்டனுக்கும் பியோங்யாங்குக்கும் ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டு நேற்று முன்தினம் தாயகம் திரும்பினார். "இரு தரப்பிலும் நேர்மை, விருப்பம், கடந்த சுமார் 70 ஆண்டுகளாக இருந்துவந்த கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட விருப்பம் ஆகியவற்றைக் காண்கிறேன்," என்று அவர் தெரிவித்தார்.