ரத்த பரிசோதனை மூலம் 10 வகை யான புற்றுநோய்களை முன்கூட் டியே கண்டறியும் புதிய முறையை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். அமெரிக்காவில் உள்ள கிளவ்லேண்ட் மருத்துவமனையின் புற்றுநோய் கழகத்தில் மருத்துவர் எரிக் கிளன் தலைமையில் நடந்த ஆய்வின் முடிவு இவ்வாறு தெரி விக்கிறது. இந்தச் சோதனை மற்ற புற்று நோய் பரிசோதனைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. 'டிஎன்ஏ ரத்தப் பரிசோதனை' என்றொரு புதிய பரிசோதனை வந்திருக்கிறது. இதை 'திரவத் திசு ஆய்வு' என்றும் அழைக்கி றார்கள்.
ரத்த அணுவின் உட்கருவைப் பிரித்தெடுத்துச் செய்யப்படும் மர பணு ஆய்வு மூலம், எதிர்காலத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் இருக்கிறதா என்பதை அறிய முடியும் என்கிறது இந்த ஆய்வு. இதன் மூலம் புற்றுநோய் செல் எந்தளவில் வளர்ந்துள்ளது என் பதை அறிய முடியும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். 1,627 பேரிடம் மேற்கொள்ளப் பட்ட இந்த ரத்த மாதிரி ஆய்வில் 749 பேருக்கு புற்றுநோய் இல்லை யென்றும் 878 பேருக்கு புற்றுநோய் உள்ளதும் அறியப்பட்டது.