‘முழுமையான அணுவாயுதக் களைவை மட்டுமே அமெரிக்கா ஏற்கும்’

சிங்கப்பூரில் இன்று நடக்கின்ற அமெரிக்கா-வடகொரியா சந்திப் பில் முழுமையான, பரிசோதிக்கத் தக்க அணுஆயுதக் களைவை மட்டுமே அமெரிக்கா ஏற்றுக்கொள் ளும் என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ நேற்று தெரிவித்தார். வடகொரியா மறுபடியும் அணு ஆயுதம் பக்கம் திரும்ப முடியாத அளவுக்கு அந்த ஆயுதக் களைவு இடம்பெறவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். வடகொரியா இத்தகைய ஒரு நிலையைச் சாதிக்கும் வரையில் அதன் மீதான தடைகள் தொடர்ந்து இருந்து வரும் என்றும் அமைச்சர் கூறினார்.

திரு பொம்பியோ, நேற்று ஜேடபிள்யூ மெரியட் ஹோட்டல் சிங்கப்பூர் சவுத் பீச்சில் செய்தி யாளர்களிடம் பேசினார். உச்சநிலை சந்திப்புக்கு முன்ன தாக நேற்று அமெரிக்கா= வட கொரியா அதிகாரிகளுக்கு இடை யில் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்தது என்றும் அவர் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் மிகவும் வேகமாக நகர்கின்றன என்று கூறிய அவர், அமெரிக்கா எதிர் பார்ப்பதற்கு முன்னதாகவே ஒரு நிலையை பேச்சுவார்த்தைகள் எட்டிவிடும் என்று தாம் எதிர் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

அந்த நிலையை நடைமுறைக்கு சாத்தியமான ஒரு முடிவு என்று அவர் வர்ணித்தார். சிங்கப்பூரில் இன்று நடக்கும் உச்சநிலை சந்திப்பு வெற்றிபெறும் பட்சத்தில் அதனால் நம் மக்களுக்கு மட்டு மின்றி முழு உலகத்திற்கும் ஏராளமான பலன்கள் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பொம்பியோ நேற்று சிங்கப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!