அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் உச்சநிலைச் சந்திப்பு முடித்ததும், உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு முன்பாக, செந்தோசாவிலுள்ள கெப்பெலா ஹோட்டலில் சிறிது நேரம் தனியாக உலாவினர். இருவரும் நேற்று பகல் விருந்து ஒன்றாகச் சுவைத்து மகிழ்ந்தனர். இறால் காக்டெயில், மலாய் உணவான மாம்பழ சாலட், கொரிய பாணியிலான அடைத்த வெள்ளரிக்காய், வாட்டிய மாட்டிறைச்சி, இனிப்பு- காரம் சேர்த்த பன்றிச் சோறு பிரட்டல், கொரிய உணவான மீன் ஆகிய வற்றுடன் ஐஸ்கிரீம் போன்ற இனிப்புகளை அவர்கள் உண்டனர்.
நேற்றுக் காலை 9 மணியிலி ருந்து பகல் 2 மணி வரையில் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஒன்றாகச் செலவிட்ட இருவரது உடல் அசைவுகளையும் பார்த்தபோது முதலில் லேசான பதற்றம் காணப்பட்டதாகத் தெரிந்தது. பின்னர் இருவரும் தோழமை உணர்வுடன் உற்சாகமாக, ஊக்கமாகக் காணப்பட்டனர். உடன்பாடு கையெழுத்தாகி கிளம்பிச் சென்ற போது, ஒருவர் தோளை மற்றவர் தட்டிக்கொடுத்தபடி நடந்து சென்றனர். படம்: ஏஎஃப்பி