அடுத்தகட்ட பணிக்கு தயார்

அமெரிக்கா - வடகொரியா இடையிலான அணுவாயுதத்தை அகற்றும் ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து அமெரிக்காவின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கூறிய அதிபர் டோனல்ட் டிரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜான் பொம்பியோ விரைவில் ஒப்பந்தத்தில் உடன்பாடு கண்ட அம்சங்களை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொள்வார் என்று குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பு நிகழ்வதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் பொம்பியோ. அண்மையில் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்ற இவர், இதற்கு முன்னர் மத்திய புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்தபோது ஏப்ரல் மாதம் வடகொரியா சென்று கிம்மை சந்தித்துள்ளார். சென்ற மாதம் இரண்டாவது முறையாக வடகொரியா சென்று பொம்பியோ உச்சநிலை சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தார்.

அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் உச்சநிலைச் சந்திப்பில் பங்கேற்ற குழுவில் இடம்பெற்றவர்கள் இடமிருந்து அதிபர் உதவியாளரும் அரசாங்கத் தலைமை அதிகாரியுமான ஜான் கெல்லி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ-, பிலிப்பீன்ஸுக்கான அமெரிக்கத் தூதர் சங் கின். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முழுமையான செய்தி படிக்க

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!