கிம்: உலகம் பெரும் மாற்றத்தைக் காணும்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் பல அம் சங்களையும் உள்ளடக்கிய உடன் பாடு ஒன்றில் நேற்று கையெழுத் திட்டனர். கொரிய தீபகற்பத்தில் அணுஆயுதக்களைவைச் செய்து முடிக்க அந்த உடன்பாட்டில் இரு வரும் கூட்டாக உறுதி கூறினர். இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்ட உடன்பாடு, உருப் படியான இலக்கு எதையாவது தீர்மானித்து இருக்கிறதா என்பது உடனடியாகத் தெளிவாக தெரிய வில்லை. அந்த உடன்பாட்டை இருவரும் குறிப்பிடத்தக்க முன் னேற்றப் படி என்று வர்ணித்தனர். "இன்று மிகவும் வரலாற்று முக்கிய சந்திப்பை நாங்கள் நடத்தி இருக்கிறோம்.

கடந்த வரலாற்றை எல்லாம் மீண்டு புதிய ஒரு தொடக் கத்தைத் தொடங்கி இருக்கிறோம். உலகம் பெரும் மாற்றத்தைப் பார்க் கப்போகிறது," என்று வடகொரிய தலைவர் கிம் தெரிவித்தார். அதேவேளையில், "அமெரிக்கா- =வடகொரியா உறவில் திருப்பு முனை சாதிக்கப்பட்டுள்ளது," என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். "நாங்கள் இருவரும் சிலவற்றை செய்யப்போகிறோம். இருவரும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறோம். மிகவும் பெரிய, ஆபத்தான ஒரு பிரச்சினைக்குத் தீர்வுகாண நாங்கள் முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறோம்," என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்த உச்சநிலை சந்திப்பு யாரும் எதிர்பார்த்ததைவிட மிக வும் சிறப்பாக நடந்து முடிந்து இருக்கிறது என்றும் அதிபர் தெரி வித்தார். அணுஆயுதக் களைவு பற்றி கேட்டபோது அதற்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர், "அந்த நடைமுறையை மிக விரை வாக நாங்கள் தொடங்கப்போகி றோம்," என்று கூறினார். இருந்தாலும் விவரங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. அதிபர் டிரம்ப்பும் தலைவர் கிம்மும் அமர்ந்து உடன்பாட்டில் கையெழுத்திட்ட மேசை 80 ஆண்டு பழமையானது. அது 4.3 மீட்டர் நீளமானது.

மேலும் செய்திகளுக்கு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!