ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா, சிங்கப்பூரை சார்ந்த தனியார் வாடகை கார் நிறுவன மான 'கிராப்'பில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.34 பில்லி யன்) முதலீடு செய்யவுள்ளது. உலகளாவிய தனியார் வாடகை வாகனத் தொழில் துறை யில் ஒரு வாகன உற்பத்தி நிறு வனம் செய்துள்ள ஆகப் பெரிய முதலீடு இது எனக் கூறப்படுகிறது. கிராப் நிறுவனத்தின் முதலீடு திரட்டும் தொடர் முயற்சியில் ஒரு பகுதியாக டொயோட்டா முன் னணி முதலீட்டாளராக முதலீடு செய்கிறது. கிராப் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்தது.
இந்த முயற்சியில் பிற முதலீட் டாளர்களின் பங்கு குறித்து பிஸ்னஸ் டைம்ஸ் நாளிதழ் கேட்ட தற்கு, "இந்த முறை டொயோட்டா முன்னணி முதலீட்டாளர்களில் ஒன்றாக உள்ளது. பிற முதலீட் டாளர்கள் குறித்த விவரங்களை நாங்கள் இப்போது வெளியிட வில்லை. என்றாலும், கிராப்புடன் பங்கு சேர விரும்பும் முதலீட்டாளர் களின் தரம் எங்களுக்கு மகிழ்ச்சி யைத் தருகிறது," என்று பதில ளித்தார் கிராப் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர்.