மின்ஸ்கூட்டர் விபத்து: குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞர்

தமது தந்தை மின்ஸ்கூட்டர் ஒன்றை வாங்கித் தந்த இரண்டே மாதங்களில், பாதசாரி ஒருவர் மீது மோதி அவருக்கு கடுமையான காயங்களை விளைவித்தார் 18 வயது நிக்கலஸ் திங் நய் ஜியே தனது குற்றத்தை நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது மின்ஸ்கூட்டரை கவனமாக ஓட்டத் தவறினார் நிக்கலஸ். இந்த விபத்தில் காயமடைந்த 55 வயது திருவாட்டி ஆங் லியூ கியாவ், ஒரு மாத காலத்திற்கு கோமாவில் கிடந்தார். மூன்று பிள்ளைகளுக்குத் தாயான அவரால் கடந்த கால நிகழ்வுகளை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார் திருவாட்டி ஆங்கின் கணவர்.

மின்ஸ்கூட்டர் மோதியதில் காயமைடந்த திருவாட்டி ஆங் லியூ கியாவ் (வலது) உடன் அவரது கணவர். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

மேலும் செய்திகளுக்கு