அடுத்த இருபது ஆண்டுகளில் கண் நோய்கள் அதிகரிக்கக்கூடும்

சிங்கப்பூரில் கண் நோய் உடைய வர்களின் எண்ணிக்கை அடுத்த 20 ஆண்டுகளில் கணிசமாக அதி கரிக்கக்கூடும் என உள்ளூ ரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இன வாரியாக பார்க்கும்போது, குறிப்பிட்ட சில கண் நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண் ணிக்கை இரு மடங்கிற்கு மேல் அதிகரிக்கக்கூடும் என ஆய் வாளர் கள் மதிப்பிட்டுள்ளனர். 'எப்பிரெட்டினல் மெம்ப்ரேன்' எனப்படும் ஒரு வகை கண் நோயால் இந்தியர்கள் பாதிக்கப் படும் சம்பவங்கள் 112 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என கணிக்கப் பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படு வோரின் கண்களின் விழித்திரை மீது மெல்லிய சவ்வு வளர்வதால் கண் பார்வை மங்கலாகும். நீரிழிவால் ஏற்படும் 'டயபிட்டிக் ரெட்டினோபதி' எனப்படும் கண் நோயால் சீனர்களும் மலாய்க்காரர் களும் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!