கேலாங் ரோட்டில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப் பட்டதன் தொடர்பில் 30 வயது ஆடவர் ஒருவர் கைதாகி இருக் கிறார். பிடிபட்டுள்ளவர் மலேசியர். போலிஸ் நேற்று அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்தது. எண் 218 கேலாங் ரோட்டில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 7-.50 மணிக்கு மோதல் நடப்பதாக தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று போலிஸ் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 29 வயது ஆடவர் ஒருவர் அசைவின்றி கிடந்தார். அவர் இறந்துவிட்டதாக அதே இடத்தில் மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கொலை என்று போலிஸ் வகைப்படுத்தி இருக்கிறது. மரணமடைந்தவரும் மலேசியர் என்று தெரிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது. சம்பவம் நிகழ்ந்த கட்ட டத்தின் மூன்றாவது மாடியில் நடைவழியில் உடல் கிடந்தது. அந்த நான்கு மாடி கட்டடத்தின் கீழ்த்தளத்தில் காப்பி கடை இருக் கிறது. மேல் மாடிகளில் குடியிருப்பு இடங்கள் இருப்பதாகத் தெரி கிறது.
எண் 218, கேலாங் ரோட்டில் மோதல் நடந்தது பற்றி காலை சுமார் 7.50 மணிக்கு போலிசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. படம்: ஷின்மின் டெய்லி நியூஸ்