எஸ். வெங்கடேஷ்வரன்
இஸ்தானாவில் நேற்று நடந்த நோன்புப் பெருநாள் பொதுவர வேற்பு நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப் அவரது கணவர் அப்துல்லா அல்ஹப்ஷியு டன் வசதி குறைந்த சிறுவர்கள், இளையர்கள், மற்றும் அவர்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துற வாடி மகிழ்ந்தார். திருவாட்டி ஹலிமா அதிபராகி கொண்டாடும் முதல் நோன்புப் பெருநாள் இது. "ஹரி ராயா நாளில் நம் சமு தாயத்தில் இருக்கும் வசதி குறைந்தோரை மறந்துவிடக் கூடாது.
வெவ்வேறு சமூகச் சேவை அமைப்புகளைச் சேர்ந்த குழந்தைகளையும் இளையர்களை யும் சந்தித்து அவர்களுடன் கலந் துறவாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார் அதிபர். பாய்ஸ் டவுன், முகம்மதியா வெல்ஃபேர் ஹோம் போன்ற அமைப்புகளிலிருந்து, 7 வரை 18 வயதிற்கு உட்பட்ட சுமார் 50 சிறு வர்கள் இஸ்தானா வந்திருந்த னர். இஸ்தானா பூங்காவில் காலை 8.30லிருந்து மாலை 6 மணி வரை பல நிகழ்ச்சிகள் நடந்தன.
அதிபர் ஹலிமா யாக்கோப், கொக்னிஸன்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஹென்னா வரையும் தொண்டூழியர்களிடம் பேசி மகிழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்