வெளிநாட்டு மாணவர்கள் தொடர் பான ஆட்கடத்தல் மோசடி குறித்து கடந்த இரண்டு நாட் களில் மூன்று புகார்கள் செய்யப் பட்டுள்ளதாக போலிசார் தெரி வித்துள்ளனர். சிங்கப்பூரில் படித்துக்கொண்டி ருக்கும் வெளிநாட்டு மாணவியிட மிருந்து $22,010 பணமும் மற் றொரு மாணவரிடம் $4,800 பணமும் மோசடி செய்யப்பட்ட தாகக் கூறப்படுகிறது. மோசடிப் பேர்வழிகளுக்காக மின்னிலக்க நாணயங்களை வாங்க அவர்களது பணம் பயன் படுத்தப்பட்டது.
சீனாவைச் சேர்ந்த அந்த மாண வர்களில், அரசாங்க அதிகாரிகள் என தங்களைக் கூறிக்கொள்ளும் அடையாளம் தெரியாத நபர்களி டமிருந்து தொலைபேசி அழைப்பு களைப் பெற்றதாக போலிசார் தெரிவித்தனர். ஏமாந்த மாணவி, அடுத்த சில நாட்களுக்கு யாரையும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று மோசடிக்காரர்களால் எச்சரிக்கப் பட்டார். அதனைத் தொடர்ந்து, சீனா விலுள்ள அந்தப் பெண்ணின் பெற்றோர்களை அழைத்து, அவர் களது மகள் தங்களால் கடத்தப் பட்டதாக மோசடிக்காரர்கள் பொய் யுரைத்து மிரட்டினர்.