இரண்டாம் உலகப்போரைப் பார்த்து வளர்ந்த தன்னுடைய தந்தை காட் டிய வழியிலேயே தன் வேலை, குடும்பத்தைத் தான் அணுகுவதாக நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் தெரிவித்து இருக்கிறார். இப்போது தன்னுடைய 16 வயது பையனுடன் மெதுஓட்டம் ஓடும்போது மகன் தன்னை பல தடவை முந்திக்கொண்டு ஓடுவ தாகவும் அதைப் பார்க்கையில் தனக்கு அந்தக் காலம் நினைவுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தன் தந்தையுடன் தான் அப் போது மெதுஓட்டம் ஓடியபோது தான் அவரை முந்திக்கொண்டு ஓடியதைப் போலவே இப்போது நடக்கிறது என்று அவர் தெரி வித்தார்.
எல்லாம் எப்படி மாறும் என்பதை இது நினைவூட்டுகிறது என்றும் இத்தகைய நிகழ்வுகளை நேசத் துடன் உயர்ந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தந்தையர்களின் அருமை பெருமைகளை போற்றிக் கொண் டாடும் நோக்கத்துடன் 'தந்தைய ரைக் கொண்டாடுவோம் 2018' என்ற ஒருமாதகால இயக்கம் நேற்றுத் தொடங்கியது.
நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இடமிருந்து சத்தியாஷணன் ராம்தாஸ், 12, தேவி மணியம், 65, கிருஷ்ணன் முருகையா, 70, கவினேஷன் ராம்தாஸ், 14, லீமதி கிருஷ்ணன், 40, ராம்தாஸ் தனபால், 44. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்