நிலப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் பதிவிலிருந்து விலக்கப்பட்ட மொத்தம் 120 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. அவற்றில் பெரும்பாலா னவை நான்கு கதவுகள் கொண்ட கார் கள் அடங்கும். பதிவிலிருந்து விலக்கப்பட்ட அந்த வாகனங்கள் ஏற்றுமதிக்கு உரியவை என அறிவிக்கப்பட்டு இருந்தன, அல்லது அவை நசுக் கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு அப்பாற்பட்டு வைக்கப்பட்டிருந்தன என ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது. கார் விற்பனையாளர்கள், கார் உரிமையாளர்களுக்கு எதிராக வெவ்வேறு பகுதிகளில் அந்தத் திடீர் சோதனை நடவடிக்கைகள் இம்மாதம் 7ஆம் தேதி மேற்கொ ள்ளப்பட்டன. "இந்த விவகாரம் தொடர்பில் சோதனை மேற்கொள்ளப்பட்ட இடங்களின் உரிமையாளர்கள் நிலப் போக்குவரத்து ஆணை யத்தின் விசாரணைக்கு உதவி வருகின்றனர்," என ஆணையம் விவரித்தது.
பதிவிலிருந்து விலக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்