பாசிர் ரிஸ் ஸ்திரீட் 21ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் 270ன் அலங்கார முகப்பு நேற்று காலை குறைந்தது எட்டு மாடி உயரத் திலிருந்து இடிந்து கீழே விழுந்தது. இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு மணி நேரத்திற்குள் போலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தடைந்து பாதிக்கப்பட்ட இடத் தைச் சுற்றி தடுப்புவேலி இட்டனர் என அந்த புளோக்கில் வசிக்கும் குடியிருப்பாளரான திருமதி யீ ருவோஷி கூறினார். தமது மூன்று மாத மகளுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தபோ து இடி தாக்கியதுபோல பெரிய சத்தம் கேட்டதாக அவர் சொன் னார்.
கீழே விழுந்த அலங்கார முகப்புப் பகுதி. படம்: யீ ருவோஷி