குண்டர் கும்பலின் மூத்த உறுப்பினராக இருந்ததோடு மோட்டார்சைக்கிள் கும்பல் ஒன்றின் தலைவனாகவும் இருந்த காவல் அதிகாரி உமர் ஹசான்னுக்கு(படம்) நேற்று ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் போலிஸ் படையின் அங் மோ கியோ பிரிவில் மூத்த காவல்துறை அதிகாரியாகப் பணிபு ரிந்த உமர், சட்டவிரோத கும்பலில் உறுப்பினராக இருந்த இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.
இதேபோல் மேலும் இரு குற்றங்கள் விசாரணை யின்போது கவனத்தில் கொள்ளப் பட்டன. 2001இல் மேலும் மூவருடன் சேர்ந்து ஒரு மோட்டார் சைக்கிள் ஆர்வலர் குழுவை உமர் ஆரம்பித்தார். பின்னர், ஒரு குண் டர் கும்பலில் உறுப்பின ராகி ஆறு ஆண்டுகளுக்குப்பின் வேறொரு குண்டர் கும்பலில் மூத்த உறுப் பினர் ஆனார். குண்டர் கும்பலின் துணைத் தலைவரிடம் தன் மோட்டார் சைக்கிள் குழுவைக் கும்பலுடன் தொடர்புபடுத்திக் கொள்ளுமாறு உமர் கேட்டுக்கொ ண்டதற்கு துணைத் தலைவ ரும் சம்மதித் ததாக அறியப்படுகிறது. திருமணம் ஒன்றில் குண்டர் கும்பலைச் சேர்ந்த சிலர் தங்கள் கும்பலின் வாசகங்களைப் பாடிய காணொளியின் வழி தகவல் அறிந்த போலிசார் உமரைக் கைது செய்தனர்.