சிங்கப்பூர் மண்ணில் முதன்முத லாக ஸ்ட்ராபெர்ரி தாவரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் தட்பவெப்பநிலைக் கும் இந்த மண் ணுக்கும் ஸ்ட்ரா பெர்ரி தாவரத்தை வளர்ப்பது என் பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந் தது. அது இப்போது தொழில் நுட்பத்தால் சாத்தியமாகி யுள்ளது. அந்தத் தாவரம் செழித்து வளர்வதற்கேற்ப சூழலை மாற்றி யமைத்து ஊட்டச் சத்து நீரூற்றி வளர்த்துள்ளது 'சஸ்டெனிர் அக்ரிகல்ட்சர்' என்னும் நிறுவனம். ஸ்ட்ராபெர்ரி தோட்டம் வளர்க்கப் படும் 1,000 சதுர அடி பண் ணைக்கு நேற்று வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் வருகை புரிந்தார்.
அரசாங்கம் நகர்ப்புற வேளாண் துறைக்கு தொடர்ந்து ஆதரவளிக் கும் என்று அமைச்சர் கோ கூறி னார். "இந்தத் துறை இரண்டு சவால்களை எதிர்நோக்குகின்றன. அவற்றில் ஒன்று எளிதில் பயன்படுத்தக்கூடிய குறைந்த செலவிலான தானியக்க முறை, இரண்டாவது உள்ளரங்குகளில் வளர்க்கப்படும் தவாரங்கள் பற்றிய முழுமையான அறிவியலை அறிந்துகொள்வது. உலகம் முழுவதும் நகர வேளாண்மை முறை இன்னும் புதியதே. எனவே தான் அத்துறை எதிர்நோக்கும் சில சவால்களுக்கு தீர்வு கிட்ட வில்லை. இருப்பினும் புத்தாக்க சேவையளிப்போர் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அமைச்சர்.
ஸ்ட்ராபெர்ரி செடிகளைப் பார்வையிடும் வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்