சிங்கப்பூர் ஆயுதப்படையின் பயிற்சியின்போது வெப்பப் பாதிப்பில் இருந்து வீரர்களைப் பாதுகாக்க இப்போதுள்ள முறையையும் அவ் வாறு பாதிக்கப்படும் வீரர்களுக்கு சிகிச்சை வழங்கும் முறையையும் தற்காப்பு அமைச்சு மேம்படுத்தலாம் என்று தற்காப்பு அமைச்சு சாராத தன்னிச்சையான மறு ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. இதனை தற் காப்புப்படையின் தலைவர் மெல் வின் ஓங் நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேல்விவரங் கள் தெரிவிக்கவில்லை.
அண்மையில் தேசிய சேவை யாளர் டேவ் லீ மரண மடைந்ததை யடுத்து, சிங்கப்பூர் ஆயுதப்படை யில் தற்போது கடைப்பிடிக்கப்படும் வெப்பப் பாதிப்பு தொடர்பான கொள்கைகள் வெளிநாட்டு ராணுவம் மற்றும் தொழிற்கூடங் களில் கடைப்பிடிக்கப்படும் கொள்கைகளுக்கு ஒத்ததாக உள்ளது என்று அக்குழு அறிவ தாக திரு மெல்வின் ஓங் தெரிவித்தார். கார்ப்பரல் ஃபர்ஸ்ட் கிளாஸ் லீ கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வெப்பப் பாதிப்பால் மரணமடைந் தார். அதனையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுசெய்ய மறுஆய்வுக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.