லாவோஸ் நிவாரணப் பணியில் சிங்கப்பூர் மோப்ப நாய்கள்

சிங்கப்பூர் போலிஸ் படையின் கே=9 பிரிவைச் சேர்ந்த மூன்று மோப்ப நாய்கள் முதன்முதலாக வெளிநாட்டு நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. லாவோசில் அணைக்கட்டு உடைந்ததால் ஏற்பட்ட பேரிடர் நிவாரணப் பணிகளில் அந்த நாய் கள் உதவி வருகின்றன. யாராவது சிக்கியிருக்கிறார்களா என்பதை மோப்பம் பிடித்து கண்டுபிடித்து உதவும் ஆற்றல்மிக்க அந்த நாய்கள், திங்கட்கிழமை காலையில் உள்துறைக் குழுவைச் சேர்ந்த ஓர் அணியுடன் பாய லேபார் விமா னத் தளத்திலிருந்து புறப்பட்டன.

அந்த அணியில் 32 பேர் இருக் கிறார்கள். அவர்களில் 14 பேர் போலிஸ் அதிகாரிகள். 18 பேர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் என்று இந்த அமைப்புகள் கூட்டறிக்கையில் தெரிவித்தன. சிங்கப்பூர் குடியரசு விமானப் படையின் சி=130 போக்குவரத்து விமானத்தில் அவர்கள் லாவோஸ் சென்று சேர்ந்தார்கள். கேப்டன் கண்ணன் செல்வராஜ் தலைமையிலான சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக் குழு, ஏற்கெனவே லாவோசில் ஆகஸ்ட் 4 முதல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவந்த 17 பேர் குழுவுக்குப் பதிலாக செயலாற்றும். அந்த 17 பேரில் 14 பேர் நேற்று சிங்கப்பூர் திரும்பினர். அவர்களை சுகாதார, உள்துறை அமைச்சுகளுக் கான மூத்த நாடாளுமன்றச் செய லாளர் அம்ரின் அமின் பாய லேபார் தளத்தில் வரவேற்றார். மற்றவர்கள் லாவோசிலேயே தொடர்ந்து தங்கி இருந்து பொறுப்புகளைப் புதிய குழுவிடம் ஒப்டைப்பார்கள் என்று இந்தப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

சிங்கப்பூர் போலிஸ் படை அதிகாரிகள் மற்றும் கே-9 பிரிவு மோப்ப நாய்களுடன் உள்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளர் பாங் கின் கியோங் (நடு). படம்: சிங்கப்பூர் போலிஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!