கடன்முதலைகள் அலைக்கழிப்பு விவகாரங்கள் அண்மைய காலத் தில் அதிகரித்து இருக்கின்றன. சென்ற வாரம் மட்டும் நான்கு சம் பவங்கள் பற்றி புகார்கள் தெரிவிக் கப்பட்டு இருக்கின்றன என்று போலிஸ் குறிப்பிட்டு இருக்கிறது. பிடிபட்ட சந்தேகப்பேர்வழிகளில் ஒருவரான 20வயது மலேசிய ஆடவரை நேற்று போலிஸ் புலன் விசாரணை அதிகாரிகள், ஜூரோங் வெஸ்ட்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு நேரே கொண்டு சென்றார்கள். அந்த நபர், வீடமைப்பு வளர்ச் சிக் கழக அடுக்குமாடி வீடு ஒன்றில் தீ மூட்டிவிட்டார். பக்கத்து வீடு ஒன்றில் சாயத்தைத் தெளித்துவிட்டார். சிங்கப்பூர் முழுவதும் அவர், கடன்முதலை அலைக்கழிப்பு தொடர்பான ஆறு விவகாரங்களில் ஈடுபட்டு இருக்கிறார் என்று கூறப் படுகிறது.
அந்தச் சம்பவங்களில் மூன்று சம்பவங்கள் தீ மூட்டப் பட்ட சம்பவங்கள் ஆகும். ஜூரோங் வெஸ்ட், ஹவ்காங் முதலான இடங்களிலுள்ள வீடு களில் அந்த நபர் இத்தகைய காரி யங்களை அரங்கேற்றி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த ஆடவர் மீது சனிக் கிழமை குற்றம் சுமத்தப்பட்டது. தீ மூட்டி அதன்மூலம் அந்த நபர், சட்டவிரோத கடன்முதலை அலைக்கழிப்பு குற்றச்செயலில் ஈடுபட்டு இருக்கிறார் என்று குற் றச்சாட்டு கூறுகிறது. குற்றவாளி என்று தீர்ப்பானால் அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்க முடியும். $50,000 வரை அபராதம், ஆறு பிரம்படிகள் வரை அவருக்குத் தண்டனை கிடைக்கக்கூடும். இதனிடையே, ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 42ல் இருக்கும் 401வது புளோக்கில் உள்ள ஒரு வீட்டின் கதவைக் கொளுத்திவிட்ட தற்காக சென்ற புதன்கிழமை 19 வயது இளைஞர் ஒருவர் கைதா னார்.