ராணுவம், போலிஸ், குடிமைத் தற்காப்புப் படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்று இருக்கும் மோப்ப நாய்களை பொதுமக்கள் இப்போது தத்தெடுத்துக் கொள்ளலாம். அவற்றை வீடமைப்பு வளர்ச் சிக் கழக அடுக்குமாடி வீடு களில் வைத்து வளர்க்க ஒரு புதிய ஓராண்டு முன்னோடி விரிவாக்கத் திட்டத்தின்கீழ் வாய்ப்பு தரப்படுகிறது. சிங்கப்பூரில் 2012ல் நாய் தத்தெடுப்புத் திட்டம் ஒன்று நடப்புக்கு வந்தது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வீவக பேட்டைகளில் நாய் களை வளர்க்க அந்தத் திட்டம் அனுமதி அளித்தது.
அது இப்போது விரிவாக்கப் படுகிறது என்று தேசிய வளர்ச்சி அமைச்சு, உள்துறை அமைச்சு, தற்காப்பு அமைச்சு ஆகியவை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்பு 2017 ஜூன் மாதம் வேறு ஓர் ஓராண்டு முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் படைப் பிரிவுகளைச் சேர்ந்த மோப்ப நாய் வல்லுநர்கள், ஓய்வு பெற்ற நாய்களைத் தத்தெடுத்து தங்கள் வீடுகளில் வளர்க்க அனுமதிக் கப்பட்டனர். இந்த முன்னோடி திட்டம் நிரந்தரத் திட்டமாக ஆக்கப்பட்டுள்ளது.