ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள வீவக வீட்டில் நேற்று பிற்பகல் மூண்ட தீயால் ஆடவர் ஒருவருக்கு தீப் புண்கள் ஏற்பட்டன. பிற்பகல் 12.55 மணிவாக்கில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தீயணைப்புப் பணியில் ஈடுபட் டது. ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 24, புளோக் 249ன் ஒன்பதாவது மாடியில் உள்ள வீட்டின் படுக் கையறையும் தீயில் சிக்கியது. இரண்டு தண்ணீர் பாய்ச்சும் கருவிகள் மூலம் அத்தீ அணைக் கப்பட்டது. காயமடைந்த 60களின் வயதுடைய ஆடவர் இங் டெங் ஃபோங் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார்.
வீட்டின் சன்னலிலிருந்து புகை வெளியேறுவதைக் காட்டும் காணொளிப் படம் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் போலிசாரும் சம்பவம் பகுதியில் இருப்பதை அப்படம் காட்டியது. பக்கத்தில் உள்ள புளோக் 247ன் குடியிருப் பாளரான திருவாட்டி அன்னா எஸ்டெல்லா என்பவர் இச்சம்பவம் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசினார். சமைக்கத் தொடங்கியபோது தீயணைப்பு வாகனங்களின் எச் சரிக்கை ஒலியைக் கேட்டதாக அவர் கூறினார். "வெளியில் எட்டிப் பார்த்த போது எதிர்த்திசையில் உள்ள வீவக வீட்டிலிருந்து அடர்த்தி புகை வெளியானது. சுமார் 15 நிமிடங்கள் வரை தீப்பிடித்ததுபோலத் தெரிந்தது. தீயணைப்பாளர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்துவிட்டனர்," என்றார் அந்த இல்லத்தரசி.
ஜூரோங் ஈஸ்ட் புளோக் 249 வீட்டுப் படுக்கையறையில் மூண்ட தீ. படம்: ஃபேஸ்புக்/அன்னா எஸ்டெல்லா