அரசாங்கத்தின் 140க்கும் மேற் பட்ட மின்னிலக்க சேவைகளைப் பெற செப்டம்பர் முதல் தேதியில் இருந்து வர்த்தகங்கள் 'கார்ப்பாஸ்' முறையையே பயன் படுத்த முடியும். நடப்பிலுள்ள 'சிங்பாஸ்', 'ஈஸி' (இணைய சேவை களைப் பெற அனுமதி வழங்கும் முறை) போன்ற சேவைகளுக்குப் பதிலாக இனி 'கார்ப்பாஸ்' பயன்படுத்தப்படும். 'சிங்கப்பூர் கார்ப்பரெட் அக்சஸ் (கார்ப்பாஸ்)' என்பது வர்த்தகங்கள், லாபநோக்கமற்ற ஏனைய நிறுவனங்கள், சங்கங்கள் ஆகியவற்றுக்கான வர்த்தக மின்னிலக்க அடையாள முறை.
இவை மத்திய சேமநிதி கழகம், உள்நாட்டு வருவாய் ஆணையம், மனிதவள அமைச்சு போன்ற அரசாங்க அமைப்புகளுடன் இணையம் வழி தொடர்புகொண்டு சேவைகளைப் பெற இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும். கடந்த 2016 செப்டம்பர் மாதம் இந்த சேவை தொடங்கப்பட்டது முதல் 90 விழுக்காட்டுக்கும் மேற் பட்ட வர்த்தகங்கள், அரசாங்க மின்னிலக்க சேவைகளுக்கு 'கார்ப்பாஸ்' பயன்படுத்துகின்றன என்று அரசாங்க தொழில்நுட்ப முகவை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. 'கார்ப்பாஸ்' உருவாக்கத்தில் தொழில்துறையின் பங்களிப்பு குறித்து மகிழ்ச்சி தருகிறது. அரசாங்கத்தின் மின்னிலக்கமய மாகும் முயற்சிகளில் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர் என்று அரசாங்க தொழில்நுட்ப முகவை யின் தலைமை நிர்வாகியான கோ பிங் சூன் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் அறிவார்ந்த தேச இலக்கையும், 'மின்னிலக்க அர சாங்க' திட்டத்தின்படி மக்களுக் கும் வர்த்தகங்களுக்கும் பாதுகாப் பான நம்பகமான மின்னிலக்க சேவைகைளை உருவாக்கும் அர சாங்கத்தின் நோக்கத்தையும் 'கார்ப்பாஸ்' ஆதரிப்பதாக அர சாங்க தொழில்நுட்ப முகவை கூறியது.