ஜோகூர் பாரு-சிங்கப்பூர் இணைப்பு ரயில்: இரு நாடுகளும் நாட்டம்

சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், கோலாலம்பூரில் நேற்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் போக்குவரத்து அம்சங்களைப் பற்றி பரந்த அளவில் விவாதித்தனர். இரு அமைச்சர்களும் விவாதித்த திட்டங்களில், ஜோகூரையும் சிங்கப்பூரையும் இணைக்கும் ரயில் திட்டமும் (RTS) அடங்கும் என்று போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இரு அமைச்சர்களும் கேடிஎம்பி (KTMB) தெப்ராவ் இடைவழிச் சேவை குறித்தும் பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையில் போக்குவரத்துத் துறை ஒத்துழைப்பைப் பலப்படுத்த இரு அமைச்சர்களும் நாட்டம் தெரிவித்தனர். ஜோகூர் பாரு=சிங்கப்பூர் இணைப்பு ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தாங்கள் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். புதிய திட்டம் இப்போதைய தரைவழி சோதனைச்சாவடிகளில் ஏற்படக்கூடிய தேக்கத்தைக் குறைக்க மிகவும் உதவும் என்று பேச்சாளர் கூறினார்.

அந்த 4 கி.மீ. இணைப்பு ரயில் திட்டம் 2024 முடிவில் நடப்புக்கு வர திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மலேசியாவில் புதிதாக பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சிக்கு வந்ததையடுத்து அந்தத் திட்டத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. சிங்கப்பூர் எம்ஆர்டி நிறுவனமும் மலேசியாவின் தேசிய ரயில்வே நிர்வாக நிறுவனமும் கூட்டுத்தொழில் நிறுவனம் ஒன்றை அமைத்து அந்த இணைப்பு ரயில் திட்டத்தை நிர்வகித்து நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஜூன் 30ஆம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.

புதிய இணைப்பு ரயில் திட்டத்திற்கு மலேசிய அமைச்சரவை கொள்கை அளவில் அங்கீகாரம் வழங்கி இருப்பதாக ஜூலை 30ஆம் தேதி மலேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். முழு பச்சைக்கொடி காட்டப்பட்டதும் மலேசிய=சிங்கப்பூர் கூட்டு நிறுவனம் அமைந்துவிடும் என்றார் அவர். இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு மணி நேரத்தில் ஒரு திசையில் 10,000 பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் வாய்ந்த புதிய இணைப்பு ரயில் கட்டுமானம் அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!