சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் கூடுதல் சோதனைகள்

கதிரியக்கப் பொருள் கொண்ட தொழில்சார் கருவி ஒன்று மலேசியாவில் காணாமல் போனதைத் தொடர்ந்து சிங்கப்பூர் எல்லைகளிலுள்ள சோதனைச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புச் சோதனைகளை நடத்தி வருகிறது. சோதனைச் சாவடிகள் கதிரியக்க மிரட்டல் அளிக்கும் பொருட்களைக் கண்டுபிடிக்கும் திறன் பெற்றுள்ளன என்றும் சம்பவம் தொடர்பாக நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் நேற்று முன்தினம் தெரிவித்தது. உதாரணத்திற்கு சிங்கப்பூருக்குள் நுழையும் சரக்குகள், வாகனங்கள், பயணிகள் மீது ஸ்கேன் இயந்திரங்கள், கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்தி அதிகாரிகள் கதிர்வீச்சு அளவுகளைக் கண்டறிந்து வருவதாக கூறப்பட்டது.

இம்மாதம் பத்தாம் தேதியன்று சிரம்பானிலிருந்து ஷா அலாமுக்குச் சென்றுகொண்டிருந்த சரக்கு வண்டி ஒன்றிலிருந்து கதிரியக்க இரிடியம் கொண்ட 23 கிலோ எடையுள்ள கருவி காணாமல் போனதைத் தொடர்ந்து அதனால் ஏற்படக்கூடிய கதிர்வீச்சு வெளிப்பாட்டினைத் தீவிரவாதிகள் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்த விசாரணை தொடர்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!