பள்ளி விடுமுறையில் செந்தோசாவுக்கு செல்ல இலவச அனுமதி

ஒரு வார செப்டம்பர் பள்ளி விடுமுறையில் செந்தோசா தீவுக்குச் செல்லும் சிங்கப்பூரர்களுக்கு நுழைவுக் கட்டணங்கள் விலக்கப்படும் என்று செந்தோசா தீவு மேம்பாட்டுக் கூட்டுநிறுவனம் நேற்று அறிவித்தது. செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி பதினாறாம் தேதி வரையில் சிங்கப்பூரில் பதிவான வாகனங்களில் செல்வோருக்கும் செந்தோசா அதிவிரைவு ரயில் மூலம் செல்வோருக்கும் இந்தச் சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது. பள்ளி விடுமுறையை முன்னிட்டு இச்சலுகை வழங்கப்படும் அதே சமயம் தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய மணல் விழாவான 'செந்தோசா சென்சேஷன்' கண்காட்சியும் அமையவிருக்கிறது. இதில் 'ஐயன்மேன்', 'தோர்', 'கேப்டன் அமெரிக்கா' போன்ற சூப்பர் ஹீரோக்களின் ராட்சச உருவங்கள் இடம்பெறும். கண்காட்சியைப் பார்ப்பதற்கும் அனுமதி இலவசம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!