மின்-ஸ்கூட்டர் ஓட்டி மாதை மோதியவருக்கு சிறை

உணவங்காடி நிலையத்தில் தன் மின்-=ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற 26 வயது உணவுக்கடை உதவி யாளர் லியு ஜியாமிங் (படம்) என்ற ஆடவருக்கு, 61 வயது திருவாட்டி தே பொ சூன் மீது மோதிய குற்றத்திற் காக நேற்று ஒரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2016, அக்டோபர் 19ஆம் தேதி, பகல் 1.25 மணிக்கு ஈசூன் பார்க் உணவங்காடி நிலையத்தில் இருந்த ஒரு மேசைக்கு நடந்து சென்று கொண்டிருந்த திருவாட்டி தேயை லியு இடித்தார். அப்போது அவர் தன் மின்- ஸ்கூட்டரிலிருந்து கீழே இறங் காமல் தொடர்ந்து ஓட்டியதோடு, வண்டியின் வேகத்தையும் கட்டுப்படுத்தாமல் திருவாட்டி தே மீது மோதியதால் அவர் சில நிமிடங்கள் சுயநினைவை இழந்தார்.

கூ டெக் புவாட் மருத்துவ மனையில் திருவாட்டி தேவுக்கு, தலையின் பின் பகுதியில் ஏற்பட்ட நோவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. தன் செயலால் பிறரின் பாது காப்புக்கு நேரக்கூடிய ஆபத்தை அறிந்திருந்தும் கவனக்குறை வாக நடந்துகொண்ட லியுவுக்கு இரு வார சிறைத் தண்டனை அளிக்குமாறு அரசு தரப்பு வழக் கறிஞர் கேட்டுக்கொண் டார். ஆனால், திருவாட்டி தேவுக்கு உதவியதோடு மருத்துவ வண்டி வரும்வரை அவருக்குத் துணையாக இருந்த தன் கட்சிக்காரருக்கு ஒரு வார சிறைத் தண்டனை அல்லது $4,000 வெள்ளி அபராதம் விதிக்குமாறு தற்காப்பு வழக்கறிஞர் லோ சுன் யி கேட்டுக்கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!