பிரதமர் லீ: வீவக வீடுகள் வாடகை வீடுகள் அல்ல

வீட்டுடைமை முக்கிய தேசியக் கொள்கையாக விளங்குவதற்கான காரணத்தை பிரதமர் லீ சியன் லூங் விளக்கியுள்ளார். வீட்டு உடைமை ஒவ்வொரு சிங்கப்பூர ருக்கும் நாட்டில் ஒரு பங்கைத் தருகிறது. அனைவரது வாழ்க்கை யையும் குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார். வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான 99 ஆண்டுகால குத்தகை விவகாரம் பற்றிக் கூறிய திரு லீ, குத்தகை என்பது "நீட்டிக்கப் பட்ட வாடகை, விற் பனை அல்ல" என்ற வாதத்தை மறுத்தார். சிலரது இந்த வாதம் வியப்பாக இருப்பதாகக் கூறிய அவர், பல தனியார் சொத்துகளும் 99 ஆண்டு கால குத்தகையைக் கொண்டிருப்பதைச் சுட்டியதோடு எவரும் அதை வாடகை என்று சொல்வதில்லை என்றும் கூறினார்.

அத்தகைய தனியார் வீட்டு உரிமையாளர்களுக்கு உள்ள எல்லா உரிமைகளும் வீவக குத்தகைதாரர்களுக்கு தங்கள் வீடுகள் மீது உண்டு என்று தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியபோது பிரதமர் கூறினார். சொல்லப்போனால், வீவக உரி மையாளர்கள் கூடுதல் சலுகை களை அனுபவிக்கி றார் கள். ஏனெனில், அவர்களது வீடுகள் பெருமளவிலான அரசாங்க நிதி உதவியுடன் அவ்வப்போது மேம் பாடு காண்கிறது என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!